9 மாவட்டங்களில் அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு , கம்பஹா , களுத்துறை , யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு , கல்முனை , காலி , மாத்தறை மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் அதில் அடங்குகின்றன.
வருடத்தில் இதுவரை 9 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் , அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் , கடந்த தினங்களில் கொழும்பு மாவட்டத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 102 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவும் வகையிலான பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.