மகிந்தராஜபக்ச நாட்டை தீயிட்டு எரிக்கும்அனுமானாக மாறியுள்ளார்!

257 0

சுதந்திரதினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கைஒன்றை வெளியிட்டு 70வது சுதந்திர தினத்தைகொண்டாட நாடு இருக்குமா என்பதுபிரச்சினைக்குரியது என கூறியிருப்பதை வன்மையாககண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சிதெரிவித்துள்ளது.

கொழும்பில்இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை கூறியுள்ளார்.

நிறைவேற்றுஅதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டுமுறை பதவி வகித்த மகிந்தராஜபக்ச இவ்வாறான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பும் தலைவராகமாறியுள்ளதுடன் நாட்டை தீயிட்டு எரிக்கும்அனுமானாக மாறியுள்ளார்.

இப்படியானஇனவாத கருத்துக்களை வெளியிட்டு சிறிய கூட்டங்களை நடத்திகோயில், விகாரைகளில் வழிபட்டு முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கையானதுநாட்டின் துரதிஷ்டம்.

மகிந்தராஜபக்ச நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அவரால் ஏற்படுத்த முடியாமல்போனது.

நாட்டில்அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குபதிலாக இனவாதத்தை ஏற்படுத்தினார்.

தேசிய அரசாங்கம் என்ற வகையில் இரண்டுகட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல தேவையான சகல நடவடிக்கைகளும்முன்னெடுக்கப்படும் எனவும் முஜிபுர் ரஹ்மான்குறிப்பிட்டுள்ளார்.