முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடாக கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனக்கு சொந்தமான டுபாய் வங்கிக் கணக்கில் ஒரு பில்லியன் டொலர் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறியிருந்தமை தொடர்பாகவே இந்த இழப்பீட்டை கோரி தான் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு என்ன நடக்கின்றது என்பதை சிறிகொத்த மற்றும் அலரி மாளிகையில் வைத்தே தீர்மானிப்படுகிறது.
சந்திரிக்கா அம்மையாரும் ஊடகங்களுக்கு முன்னால் வந்து எனக்கு ஒரு பில்லியன் டொலர் பணம் டுபாய் வங்கிக் கணக்கில் இருப்பதாக கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜிதவின் 18 பில்லியன் தற்போது ஒரு பில்லியனாக குறைந்துள்ளது. தற்போது அதுவும் இல்லையாம்.
சைட்டம் நிறுவனம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
நிபந்தனைகளை நிறைவேற்றினாலேயே தேவையான பரிந்துரைகள் வழங்கப்படும். அவர்கள் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது.
சைட்டம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னரே இலங்கை மருத்துவச் சபை அங்கீகாரத்தை வழங்கும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.