உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காக கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நடித்து கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை பொது ஜன முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அந்த முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜீ எல் பீரிஸ் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.