அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில்..(காணொளி)

379 0

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில் உள்ளதன் காரணமாக அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இடங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

விதவைகள், தபுதாரர்களுக்கான உடு புடவைத்துணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை நாவிதன் வெளி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் என்.கௌசீகன் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து இந்த துணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன். மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் ஆர்.இராமக்குட்டி, சனசமூக நிலைய உத்தியோகத்தர் ஆர்.ரவீந்திரலிங்கம், கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில் உள்ளதன் காரணமாக அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.