வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

412 0

வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவப்பொம்மை எரியூட்டப்பட்டதைக் கண்டித்தும், உருவப்பொம்மை எரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஏனைய எட்டு மாகாணங்களைப் போன்று வட மாகாணத்திலும் இணைந்த நேர அட்டவணை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் தைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கு முன்னால் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தைடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி நிலையத்தில் இருந்து கண்டணப் பேரணியாக வருகைதந்து வடக்கு மாகாண சபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் இல்லாத காரணத்தால், முதலமைச்சரின் செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இதன்போது வட மாகாண போக்குவரத்து பா.டெனீஸ்வரன், வட மாகாண கல்வி  அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.