தமிழகத்தின் ஆளுநரை, முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார்.
பின்னர், அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் நல்லது நடக்கும், தர்மம் வெல்லும் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மாலை 6.50 அளவில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற வி.கே சசிக்கலா, அங்கு வணக்கத்தில் ஈடுபட்டார்.
அ தனைத் தொடர்ந்து அவர் தற்போது ஆளுநரைச் சந்திக்க உள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் அந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது.