கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்குட்படுத்தவேண்டும் – 17 அமைப்புகள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம்
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சிங்கப்பூர் விசாரணைக்குட்படுத்தவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட 17 அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
சிங்கப்பூரின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சர்வதேச விவகார பிரிவின் சொலிசிட்டர் ஜெனரலிற்கு எழுதியுள்ள கடிதத்தில் 17 அமைப்புகளும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்குட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
கீழ் கைச்சாத்திட்டுள்ள அமைப்புகளாகிய நாங்கள் உடனடியாக கோத்தபாய ராஜபக்சவை இலங்கையில் சர்வதேச சட்டங்களின் கீழ் பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றமை குறித்துவிசாரணை செய்து பொருத்தமானால் வழக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என 17அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜூலை 14 ம் திகதி கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தனது இராஜினாமாவை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பித்தார் இதன் காரணமாக அவர் தொடர்ந்தும் விடுபாட்டுரிமைக்குரியவர் இல்லை என 17 அமைப்புகளும்தெரிவித்துள்ளன.