கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை – சரத் பொன்சேகா

428 0

images (1)விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தின் போது கொத்­தணி குண்டுகள் பிர­யோகம் செய்­யப்­ப­ட­வில்லை. அதற்­கான தேவையும் எமக்கு இருக்க­வில்லை. அது­மாத்­தி­ர­மின்றி கொத்­தணி குண்டு போன்ற பார­தூ­ர­மான ஆயு­தங்கள் எம்­மிடம் இருக்­கவும் இல்லை. விமானப் படை அதனை பிர­யோகம் செய்­வ­தற்­கான வாய்ப்பு ஒரு­போதும் இருந்­த­தில்லை.

கொத்­தணி குண்­டு­களை யுத்­தத்தில் பிர­யோ­கத்­தாக கூறு­வது மாயை­யாகும் என முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

போர் குற்றம் தொடர்­பான உள்­ளக விசா­ர­ணையின் போது எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு இட­ம­ளிக்க கூடாது. அர­சி­ய­ல­மைப்பில் அதற்­கான ஏற்­பா­டுகள் இல்லை. மாறாக உள்­ளக விசா­ர­ணையின் போது சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் மற்றும் ஆலோ­ச­கர்கள் ஆகி­யோரை வர­வ­ழைப்­பதில் எவ்­வித ஆட்­சே­ப­னையும் கிடை­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இரா­ஜ­கி­ரி­யவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இரா­ஜ­கி­ரி­யவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள பிராந்­திய அமைச்­சிற்­கான கட்­ட­டத்தை நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திறந்து வைத்தார். இதன்­பின்னர் தனது கட­மை­களை அமைச்சர் சரத் பொன்­சேகா பொறு­பேற்றார். இந்­நி­கழ்­விற்கு அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.இதன் பின்­னரே ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நடை­பெற்­றது.

அங்கு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா மேலும் குறிப்­பி­டு­கையில்,பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சின் இல­க­ஙக கிரா­மிய அபி­வி­ருத்தி யாக இருந்­தாலும் உட்­கட்­ட­மைப்பு திட்­டங்­களை நாம் முன்­னெ­டுக்க போவ­தில்லை. அதற்கு மாறாக விவ­சா­யத்­துறை மேம்­ப­டுத்தல், சுற்­றுலா பய­ணி­களின் நலன் கருதி அதற்­கான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்தல், உற்­பத்தி துறையை வலுப்­ப­டுத்தல், வாகனங்ள் மற்றும் தொலை­பேசி போன்ற புதிய உற்­பத்­தி­களை ஏற்­ப­டுத்தல் , முத­லீட்­டா­ளர்­களை கொண்டு பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல் என்­பதே எமது கட­மை­யா­க­வுள்­ளது.

 

எனது அமைச்­சுக்­கான ஏற்­பா­டு­க­ளையும் சட்­ட­மூ­லங்­க­ளையும் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது. அதன் பின்­னரே எமது வேலைத்­திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க முடியும் . ஆனாலும் ஐந்து வருட பூர்த்­தியில் பல்­வேறு திட்­டங்­களை நாட்­டிற்கு அறி­மு­கப்­ப­டுத்­துவே எமது இலக்­காகும்.

 

வடமேல், ஊவா, மத்­திய மற்றும் கிழக்கு அபி­வி­ருத்தி என்­னி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. மெகா பொலிஸ் திட்­டத்தின் பிர­காரம் குறித்த மாகா­ணங்­களில் அபி­வி­ருத்தி முன்­னெ­டுக்க உள்ளோம்.மோச­டி­க­ளுக்கு இட­மில்லைபுதி­தாக நிறு­வப்­பட்ட பிராந்­திய அமைச்சில் ஏனைய அமைச்­சுக்­களை போன்று ஊழல் இடம்­பெ­றாது. அதற்கு நான் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன். அரச ஊழியர் ஒழுங்கு முறை­மையின் பிர­கா­ரமும் சுற்­ற­றிக்­கையின் பிர­கா­ரமும் செயற்­பட வேண்டும்.

சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம்

போர் குற்றம் தொடர்­பான உள்­ளக விசா­ர­ணையின் போது சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபை உட்­பட சர்­வ­தேச நாடுகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இருந்­தாலும் போர் குற்றம் தொடர்­பி­லான உள்­ளக விசா­ர­ணையின் போது சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தற்கு எமது அர­சி­ய­ல­மைப்பில் எவ்­வித அனு­ம­தியும் கிடை­யாது. ஆகையால் உள்­ளக விசா­ரணை செயற்த்­திட்­டத்தின் போது சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு இட­ம­ளிக்க கூடாது. எனினும் அதற்கு மாறாக உள்­ளக விசா­ர­ணையின் போது சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் மற்றும் ஆலோ­ச­கர்­களை வர­வ­ழைப்­பதில் எவ்­வித ஆட்­சே­ப­னையும் கிடை­யாது.

இலங்­கையில் இதற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தியின் போது பல­த­ரப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு சர்­வ­தேச பங்­க­ளிப்­புகள் பெறப்­பட்­டுள்­ளன.

கொத்­தணி குண்டு

விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ராக யுத்­ததின் போது கொத்­தணி குண்டு பிர­யோகம் செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்டு வரு­கின்­றது. ஈது தொடர்பில் சர்­வ­தேச அளவில் பெரு­ம­ளவில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் இரா­ணுவ தள­ப­தி­யாக செயற்­பட்­டவர் என்ற வகையில் கொத்­தணி குண்­டு­களை நாம் ஒரு­போதும் பிர­யோகம் செய்­ய­வில்லை என்­ப­தனை கூறு­கின்றேன். அதற்­கான தேவையும் எமக்கு இருக்­க­வில்லை. அது­மாத்­தி­ர­மின்றி கொத்தணி குண்டு போன்ற பாரதூரமான ஆயுதங்கள் எம்மிடம் இருக்கவும் இல்லை. அதேபோன்று விமான படையும் அதனை பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்ததில்லை. கொத்தணி குண்டு பிரயோகித்தாக கூறப்படுவது வெறும் மாயையாகும்.

நிழல் அமைச்சரவை

தேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அமைச்சுக்களை அவதானிக்கும் முகமாக நிழல் அமைச்சரவை நிறுவப்பட்டுள்ளது. எனவே முதலில் நிழல் அமைச்சரவையை பரிசுத்தப்படுத்த வேண்டும். அந்த அமைச்சரவையில் முழுமையாக மோசடியாளர்களே உள்ளனர் என்றார்.