ஜனாதிபதி பதவிக்காக ரணில் அரசியலமைப்புச் சதி : தடுத்து நிறுத்த தயான் 5 யோசனைகள் முன்வைப்பு

180 0

ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சதியில் ஈடுபட்டுள்ளதாக கலாநிதி தயான் ஜயத்திலக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சதியை வெற்றி கொள்ளாதபட்சத்தில் ராஜபக்ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றும் போராட்டம் தோல்லியடைந்து விட்டதாகவே கொள்ள வேண்டுடியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரணிலின் ஜனாதிபதி பதவிக்கான அரசியலமைப்புச் சதியை எவ்வாறு முறியடிக்கலாம் என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளும் ராஜபக்ஷவுக்கு எதிரானசக்திகளும் தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

எதிரணிகள் தமக்குள் பிளவுபட்டு நிற்பதால் ராஜபக்ஷக்களின் அரசியல் ஆதிக்கம் தொடரும் ஆபத்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்நிலையில் ரணிலின் சதியை முறியடிப்பதற்கான ஐந்து யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவை வருமாறு,முதலாவதாக பொதுஜனபெரமுனவின் வாக்குகளை ரணிலிடமிருந்து நீக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

இரண்டாவதாக பொதுஜனபெரமுனவைப் பிளவுபடுத்தி ராஜபக்ஷக்களையும் ரணிலை ஆதரிக்கும் ராஜபக்ஷ சார்பு பிரிவையும் தனிமைப்படுத்தல்.

மூன்றாவதாக, டலஸ் அழகப்பெரும போன்ற பொதுஜனபெரமுனவில் கருத்து வேறுபாடுள்ள ஆளுமைகளை ஆதரித்தல்.

நான்காவதாக ரணிலின் வேட்புமனுவைச் சுற்றி எதிர்ப்புடன் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்தல் ஐந்தாவதாகரூபவ் ரணிலுக்கு ஆதரவான பொதுஜன பெரமுன கட்சியை ஒன்றிணையவிடாது தந்திரோபய வாக்களிப்பு முறையை பின்பற்றல் என்பன அவையாகும் .