மிகப்பெருமளவு கடனும் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைளும் உள்ள நாடுகளிற்கு இலங்கை ஒரு எச்சரிக்கை அறிகுறி – சர்வதேச நாணயநிதியம்

127 0

மிகப்பெருமளவு கடனும் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைளும் உள்ள நாடுகளிற்கு இலங்கை ஒரு எச்சரிக்கை அறிகுறி என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்தோனோசியாவில் இடம்பெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் யுத்தம் தீவிரமடைந்துள்ளது இதன் காரணமாக உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன சர்வதேச நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட இறுக்கமடைந்துள்ளது பெருந்தொற்று தொடர்பான குழப்பங்களும் சர்வதேச விநியோகம் எதிர்கொள்கின்ற தடைகளும் பொருளாதார செயற்பாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் 2022-23ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என நாங்கள் மதிப்பிடவுள்ளோம், எதிர்மறையான ஆபத்துக்கள் காணப்படும் தீவிரமாகும் குறிப்பாக பணவீக்கம் அதிகமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெருமளவு கடனும்மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைளும் கொண்ட நாடுகள் மேலும் அழுத்தங்களை எதிர்கொள்ளக்கூடும் இலங்கை எந்த திசையில் செல்கின்றது என்பதை பாருங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.