இலவசக் கல்வி, சுகாதாரத்திற்கான அரச உதவிகளை குறைக்குமாறு சர்வதேச நாணயநிதியம் நிபந்தனை விதிக்கலாம் – பாலித கோஹன

213 0

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் அதிகளவு பங்களிப்பினை வழங்கவேண்டும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும்  சர்வதேச நாணயநிதியம் இன்னமும் ஆரம்பகட்ட இணக்கப்பாட்டிற்கு வரவில்லை இலங்கைக்கு அதிகளவு கடன் வழங்கியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தக்கூடிய திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் என கோரப்படுகின்றன என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன குளோபல் டைம்சிற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை அவசரகாலநிலைமை பிரகடனம் போன்ற தொடரும் நிலைமைகளிற்கு மத்தியில் கடனில் சிக்கியுள்ள நாட்டிற்கு அதன் சகாக்கள் மேலும் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது எங்களிற்கு கிடைத்த அறிக்கைகளின் படி பேச்சுவார்த்தைகள்; திருப்திகரமானமுறையில் இடம்பெற்றுள்ளனஇநாங்கள் லண்டனில் சட்டஆலோசகர்களை நியமித்துள்ளோம்இகடன் மறுசீரமைப்பு குறித்து புரிந்துகொள்ளக்கூடிய மேற்குலக நிபுணர்களையும் நாங்கள் நியமித்துள்ளோம் என பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கான புதிய ஏற்பாடுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் விதிமுறைகள் பாரமானதாகயிருக்காது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் வரும் ஒவ்வொரு முறையில் எங்களை இறுக்கிகொள்ளவேண்டியது செலவுகளை கட்டுப்படுத்த- குறைக்கவேண்டியது தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ள பாலித கோஹன ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாங்கள் இறுதிகட்டத்தில் இருப்பதால் இது கடினமானது எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் சுகாதார துறைக்கு அரசாங்கம் வழங்கும் நிதியை ( இலவச சுகாதார சேவை) குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம் என நாங்கள் கவலை கொண்டுள்ளோம் அதேபோன்று இலவசக்கல்வி குறித்தும் சர்வதேச நாணயநிதியம் பரிந்துரைகளை முன்வைக்கலாம் இது மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தலாம்.

உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதியமைப்புகளே இலங்கைக்கு அதிகளவு நிதியை வழங்கியுள்ளன.வோல்ஸ்ரீட் போன்றவையும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளன.இந்த நிதியமைப்புகள் அதிகளவு பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இருதரப்புநிதிஉதவி வழங்குபவர்களும் உதவிகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன என தெரிவித்துள்ள பாலிதகோஹன பதில் ஜனாதிபதி பதவியில் நீண்டகாலம் நீடிப்பாரா என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுமிகவும் திருப்தியற்ற நிலை ஏனென்றால் நாட்டின் தலைமைத்துவம் குறித்து திடீரென கேள்வி எழுந்துள்ளது இதன் காரணமாக அரசமைப்பு ஏற்பாடுகளை பின்பற்றவேண்டும்குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த அரசாங்கம் பதவியேற்றாலும்  அது சீனாவுடன் சிறந்த உறவை பேணும்சீனா இலங்கையின் முக்கிய வர்த்தக சகா முதலீட்டாளர் இரு நாடுகளிற்கும் இடையில் மூலோபாய உறவுகள் உள்ளன தேர்தலிற்கு பின்னர் பதவியேற்கும் எந்த அரசாங்கமும் சீனாவின் நம்பிக்கையையும் சீன மக்களின் நல்லெணத்தையும் பெறும் என பாலித கோஹன தெரிவித்துள்ளார் .