காரணத்தை கூறிய டலஸ்!

136 0

பிரதான எதிர்க்கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் வரலாற்றில் முதல் கூட்டணி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முடிவு கட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற குழுவால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது..

இது தொடர்பான தீர்மானம் நேற்று பிற்பகல் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் 19ம் திகதி ஏற்கப்படவுள்ளன.

ஜனாதிபதி நியமனம் எதிர்வரும் 20ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்றம் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.