ஃப்ரான்சின் நீஸ் நகரில் பாரவூர்தி ஒன்று சனக்கூட்டத்துடன் மோதியதில் இதுவரையில் 77 பேர் பலியாகினர்.
அங்கு நடைபெற்ற ஃபிரன்ச்சுப் புரட்சியை நினைவுக்கூறும் பெஸ்டில் தின நிகழ்வின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்கள் கூட்டத்தை மோதிய பாரவூர்தியில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் ஒரு தாக்குதல் என்று, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்த்தியின் சாரதி திட்டமிட்டே மக்கள் மீது மோதி இந்த கொலைகளை புரிந்திருப்பதாக, நீஸ் முதல்வர் க்றிஸ்ரியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளார்.