நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிட தயார் என்பதை நாட்டு மக்களிடம் கௌரவமான முறையில் தெரிவித்துக்கொள்கிறேன். பாராம்பரிய வேறுப்பாடுகள் இல்லாமல் முன்னேற்றமடையும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறேன் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகல் உறுதிப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் பதவி காலம் நிறைவடையாத போது மிகுதியாகவுள்ள காலத்திற்கு பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.
இலங்கை மக்கள் வரலாற்றில் என்றுமில்லாதவாறு சர்ச்சைக்குள்ளாகிய அரசியல்,பொருளாதாம் மற்றும் சமூக நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள்.
பொருளாதார நெருக்கடியினால் எழுச்சிப்பெற்ற மக்கள் போராட்டம் அரசியல் அதிகாரத்தை வீழ்த்தியுள்ளதால் மக்களின் நம்பிக்கையை வெல்வதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டு மக்கள் தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொள்ள கூடாது என்பதை முழுமையாக ஏற்கிறேன். சிறுபிள்ளை தொடக்கம் சிரேஷ்ட பிரஜைகள் வரை தற்போதைய நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு அவசியம் என எதிர்பார்ப்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
முன்னேற்றமடையும் இளம் தலைமுறையினருக்காக ஜனநாயக வரைபிற்குள் இருந்தவாறு சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.
தற்போதை அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியும்.பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசியலமைப்பிற்கமைய தற்போது வெற்றிடமாகியுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிட தயார் என்பதை நாட்டு மக்களிடம் கௌரவமான முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராம்பரிய வேறுப்பாடுகள் இல்லாமல் முன்னேற்றமடையும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறேன்.
சட்டவாட்சி மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதுகாத்து பொருளாதார முன்னேற்றத்திற்காக தாய் நாட்டை பாதுகாக்க முன்னெடுக்க வேண்டிய சகல தீர்மானங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.