அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள் !

123 0

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் உயர்வான ஜனநாயக தராதரங்களை பேணவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் உயர்வான ஜனநாயக தராதரங்களை பேணவேண்டும். இதன் காரணமாக இலங்கை தொடர்ந்தும் பிரதிநிதித்துவ ஜனநாயக நாடாக விளங்க முடியும் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசமைப்பின் அடிப்படையில் அதிகார மாற்றம் அமைதியான முறையில் இடம்பெறவேண்டும் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு, நாடு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் இதுவரை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அனைவரும் அரசமைப்பு நடைமுறையின் எல்லைக்குள் செயற்படவேண்டும். சட்டமொழுங்கை பேணவேண்டும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.