சர்வதேச நாடுகளில் இருந்து பெறப்படும் கடன்கள் மஹிந்த அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்தவே பயன்படுத்தப்படுவதாக அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ள இந்த காலகட்டத்தில் அரசாங்கம் கொள்கை திட்டங்களை வகுத்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
உலக நாடுகள் இலங்கையை கண்டுக் கொள்ளாத இந்த காலகட்டத்தில், சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கடன்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெறுகின்றன.
அவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற கடன்கள் மஹிந்த அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை திருப்பி செலுத்தவே பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி தொடர்பாக இன்று பாரிய கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன.
அது தொடர்பில் திறந்த விவாதத்தை நடத்த அரசாங்கம் தயாராக இருக்கிறது.
அந்த வரி அதிகரிப்பும் மகிந்த ராஜபக்ஷவின் கடன்களை செலுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் மக்களுக்கு பல்வேறுப்பட்ட நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.