தற்போதைய அரசாங்கம் கடந்த மஹிந்த அரசாங்கத்தைப் போலவே பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்துக்கு பொருளாதாரத்தை உரிய வகையில் முகாமை செய்ய முடியாதுள்ளது.
ரணில் – மைத்திரி அரசாங்கம் பழைய ராஜபக்ஷ நிர்வாகத்தை விட பொருளாதாரம் தொடர்பான பின்னடைவை சந்தித்துள்ளது.
பழைய அரசாங்கத்தின் கடனை செலுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்ன தற்போதைய அரசாங்கம் யாசகர்களுக்கு வாசனைத் திரவியங்களை பூசுவதாக கூறுகிறார்.
யாசகர்களை உருவாக்கியது யாரென தாம் பந்துல குணவர்தனவிடம் வினவுவதாகவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.