சிங்கப்பூரைச் சென்றடைந்ததும் இராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிப்பாராம் ஜனாதிபதி – சபாநாயகர் தெரிவிப்பு

308 0

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றதன் பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிப்பதாக தன்னிடம் அவர் குறிப்பிட்டதாக சபாநாயகர் கட்சி தலைவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதுடன்,நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றினால் அது பாரதுரமான விளைவை ஏற்படுத்தும் என கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியில் இருந்து விலக வேண்டும்.

அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரே மக்கள் போராட்டத் தீவிரமடைந்துள்ளது என கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கட்சி தலைலவர் கூட்டத்தில் முன்னெடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கடந்த 9ஆம் திகதி இரவு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடாக அறிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும்’என தீர்மானிக்கப்பட்டது.சபாநாயகர் இத்தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு அறிவித்தார்.

>தான் 13 ஆம் திகதி பதவி விலகுவதை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் குறிப்பிட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஓரிரு நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆராயும் வகையில் கடந்த திங்கட்கிழமை விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது குறிப்பிட்டதற்கமைய ஜனாதிபதி பதவி விலகினால் நாளை பாராளுமன்றத்தை கூட்டவும்,எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடைக்கால ஜனாதிபதிக்காக வேட்பு மனுக்கலை பரிசீலனை செய்யவும்,20ஆம் திகதி இரசகிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ள காரணத்தினால் ஜனாதிபதியின் கடமைகளை செயற்படுத்துவதற்காக அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்,தான் குறிப்பிட்டதற்கமைய பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக இன்றைய தினமே (நேற்று) அறிவிப்பேன் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக சபாநாயகர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.