மாலைதீவில் இலங்கை ஜனாதிபதி ? – மாலைதீவு வெளிவிவகார அமைச்சு விளக்கம்

166 0

இலங்கை ஜனாதிபதி மலைதீவுக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய வருகை தொடர்பாக தற்போதைக்கு எவ்விதமான நிலைப்பாடுகளையும் வெளியிட முடியாதென மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் மியுவன் மொஹமட் (miuvan mohamed ) வீரகேசரியிடம் கருத்துவெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது வரையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் இருந்து எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் தமக்குக் கிடைக்கவில்லையென மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் வினவிய விடயம் ( ஜனாதிபதி கோட்டாவின் மாலைதீவு வருகை ) சம்பந்தமாக எமது அரசாங்கம் எந்த நிலைப்பாட்மையும் தற்போது வரையில் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.