1971க்கு அழைத்தால் தகவல் கிடைக்கும்

107 0

ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள மற்றும் ஏதேனும் முறைப்பாடுகளை பதிவு செய்ய 1971 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினத்திலிருந்து இந்த தொலைபேசி இலக்கம் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இது 24 மணித்தியாலமும் செயற்பாட்டில் காணப்படும் என்றும் ரயில்வே முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், ரயில் நேர அட்டவணை, ஆசன முன்பதிவு, கட்டணங்கள் தொடர்பான தகவல்கள், ரயில் குறுக்கு வீதிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த தொலைபேசி இலக்கம் ஊடாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது