ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டிலா? மறுக்கின்றது விமானப்படை

135 0

ஜனாதிபதி கோத்தபாய விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கியுள்ளார் என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது.

இலங்கை காவல்துறையை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அமைப்பின் தலைவர் என தன்னை தெரிவித்துக்கொள்ளும் முன்னாள் பொலிஸ் அதிகாரி அஜித்தர்மபால என்பவர் ஜனாதிபதி விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கியுள்ளார் என தெரிவித்து வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.எனினும் இது உண்மையில்லை இது விமானப்படைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என விமானப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.