பசிலின் முயற்சி தோல்வி : கட்டுநாயக்க, மத்தள விமான நிலையங்களின் சிறப்பு விருந்தினர் நுழைவுப் பாதைகளுக்கு பூட்டு

145 0

நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமை இடையே, நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்கா செல்ல, முன்னாள் நிதி அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ முன்னெடுத்த முயற்சிகள், கடும் எதிர்ப்பினை அடுத்து தோல்வி அடைந்துள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று ( 12) அதிகாலை ; 3.15 டுபாய் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 649 எனும் விமானத்தில் பயணிக்க பசில் ராஜபக்ஷ, விமான நிலையத்தின் கட்டனம் செலுத்தி சேவைப் பெற்றுக்கொள்ள முடியுமான சிறப்பு விருந்தினர் நுழைவாயில் ஊடாக சென்றுள்ளார். இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர் எதிர்ப்பிற்கு மத்தியில் அங்கிருந்து திரும்பி வீடு சென்றுள்ளார்.

விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஷ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள், அதிகாரிகள் சிலரும்  தமது எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று ( 11) மாலை முதல், பசில் ராஜப்க்ஷ, டுபாய் வழியாக அமரிக்காவுக்கு தப்பிச் செல்ல விமான பயணச் சீட்டினை பெற்றுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகின. அவர் மட்டுமன்றி மேலும் ; ராஜபக்ஷ குடும்பத்தினர் 6 பேர் அவருடன் பயணிப்பதாக விமான ஆசன ஒதுக்கீட்டு பட்டியலை அடிப்படையாக கொண்டு சமூக வலைத் தலங்களில் செய்திகள் உலா வந்தன.

அதன்படி பசில் ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட விமான பயணச் சீட்டின் அடிப்படையில், அவர் மீள இலங்கைக்கு திரும்பும் திகதியாக 2023 மார்ச் 01 என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, இன்று அதிகாலை பசில் ராஜப்க்ஷ தனக்கு மிக நெருக்கமான சிலருடன் பாதுகபபுக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் விமானத்துக்கு செல்ல விமான நிலையத்தில் விஷேட விருந்தினர் பிரவேசப் பாதை ( வி.ஐ.பி. நுழைவுப் பாதை ) பயன்படுத்தியுள்ளார். எனினும் விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பரிசோதனை கூடத்துக்கு அருகே, பொது மக்கள் பசில் ராஜபக்ஷவை  அவதானித்து விழிப்படைந்துள்ளனர்

இதன்போது பொது மக்கள், தமது விமானத்துக்கான நேரம் நெருங்கியிருந்த போதும் அதனையும் பொருட்படுத்தாது பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த விமான பயணி ஒருவரின் சமூக வளைத்தள பதிவின் படி, ; அங்கு ஒரு அறையில் பசிலும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இருப்பதாக கூறப்பட்டது. எனினும் அப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு இருந்தாரா என்பதை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

இவ்வாறான நிலையிலேயே, பயணிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் போது, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளில் பலரும் பசில் ராஜபக்ஷ தொடர்பில் கடமைகளில் ஈடுபட மறுத்ததாக அறிய முடிகிறது.

இவ்வாறான பின்ணியிலேயே பசில் ராஜாப்க்ஷ மீள, பாதுகாப்பாக அவர் வந்த வாகனத்தை விடுத்து, வேறு வேன் ஒன்றின் ஊடாக அங்கிருந்து பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், ; சிறப்பு விருந்தினர் நுழைவாயிலில்  கடமைகளில் நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர். இந் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிய பசில் மத்தள விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியானதால் பின்னர் மத்தள விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும், சிறப்பு விருந்தினர் நுழைவாயிலில் ; கடமைகளில் நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர். இன்று( 12) நண்பகல் முதல் அவர்கள் அக்கடமைகளில் இருந்து விலகியுள்ளனர். அதனால் விஷேட விருந்தினர் நுழைவாயில் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது

‘குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக விஷேட விருந்தினர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் ; அதிகமாக காணப்படுகிறது.  அவ்வாறு அவர்கள் பயணித்தால் அதன்  விளைவுகளை ; குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும் அனுபவிக்க வேண்டி வரும். அதனால் அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளோம்.’ என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ; கே.ஏ.ஏ.எஸ். கணுகல குறிப்பிட்டார்.

அத்துடன் விஷேட பிரமுகர் நுழைவாயில் சேவை நடவடிக்கைகளில் இருந்து தமது உறுப்பினர்களும் விலகியுள்ளதாகவும், உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இவ்வாறு தீர்மானம் எடுக்கப்ப்ட்டதாகவும்  ஸ்ரீ லங்கா விமான சேவை சுதந்திர ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது .