கொழும்பில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

120 0

கொழும்பு – புதிய செட்டியார் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 29 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.<