ஜனாதிபதி கோட்டாபய – பிரதமர் ரணில் ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது – சம்பிக்க

174 0

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

சர்வக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் மக்கள் விடுதலை முன்னணியின் பங்கு முக்கியமானதாகும் என 43ஆவது படையணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க,சுனில் அதுனெதி,மற்றும் 43 ஆவது படையணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு (11) கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
<p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடியினை எதிர்கொள்வதற்கு ராஜபக்ஷர்கள் மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டும்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பலவீனமான நிர்வாகம் முழு நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டு மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து முறையாக பதவி விலகியிருந்தால் தற்போதைய நெருக்கடியான நிலை தோற்றம் பெற்றிருக்காது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.சர்வக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் மக்கள் விடுதலை முன்னணியின் பங்களிப்பு முக்கியமானது.

அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்ட மூலவரைபினை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்த வரைபு முழுமையாக திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி &ndash;பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை நாட்டு மக்கள் வலியுறுத்துகிறார்கள்.சர்வகட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் பல்வேறு தரப்பினரது யோசனைகளையும் பெற்றுக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும்.சர்வக்கட்சி தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.