மஹிந்த அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, அரசாங்கம் மறுசீரமைப்பு சார்ந்த விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மறுசீரமைப்புகளுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
யுத்தப்பாதிப்புக்கு உள்ளான மக்களின் நிலை அவ்வாறே தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் கூட, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு போதுமான நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
ஆனால் தற்போதும் அரசாங்;க உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த குற்றச்சாட்டுகளை கேட்க மக்கள் தயாராக இல்லை.
அவர்கள் தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையே எதிபார்த்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.