அனைத்து கட்சி அரசாங்கம் குறித்து தீர்மானிக்கப்பட்ட பின்னரே பதவி விலகுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பிரதமர் ரணில்விக்கிரசிங்க அமைச்சர்களை சந்தித்துள்ளார்,இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைத்து கட்சி அரசாங்கம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டதும் தங்களின் அமைச்சரவை பொறுப்புகளை கையளிக்க தயார் என தெரிவித்துள்ளனர்.