கிளிநொச்சியை சென்றடைந்தது யாழ் ராணி

254 0

யாழ் கிளிநொச்சிக்கான விசேட புகையிரத சேவை இன்று (11) ஆரம்பமாகியது. இன்று (11) முதல் சேவையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்

இந்த சேவையானது, தினமும் காலை  6 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும். மாவிட்டபுரத்திலிருந்து 6.05க்கும், தெல்லிப்பளையிலிருந்து 6.09க்கும், மல்லாகத்திலிருந்து 6.14க்கும், சுன்னாகத்திலிருந்து 6.18, இணுவிலிருந்து 6.22க்கும், கோண்டாவிலிருந்து 6.27க்கும், கொக்குவிலிருந்து 6.31க்கும் புறப்பட்டு 6.35க்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.

யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44, நாவற்குழி 6.50, தனங்கிளப்பு 6.54, சாவகச்சேரி 7.00, சங்கத்தானை 7.03, மீசாலை 7.07, கொடிகாமம் 7.12, மிருசுவில் 7.14, எழுதுமட்டுவாள் 7.21க்கு புறப்பட்டு பளையை 7.30க்கு வந்தடையும். அங்கிருந்து ஆனையிறவு 7.42, பரந்தன் 7.50க்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56க்கு வந்தடையும்.

மீண்டும், காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் இந்தப் புகையிரதம் பளையிலிருந்து 10.31க்கும், கொடிகாமத்திலிருந்து 10.48க்கும், சாவகச்சேரியிலிருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து 2.39க்கும், சாவகச்சேரியிலிருந்து 2.59க்கும், கொடிகாமத்திலிருந்து 3.11க்கும் புறப்பட்டு, பளையை 3.38க்கும், கிளிநொச்சியை 3.56க்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10க்கு வந்தடையும்.

மீண்டும் முறிகண்டியிலிருந்து 4.40க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் அறிவியல்நகரை 4.46க்கு வந்தடைந்து, கிளிநொச்சியிலிருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனிலிருந்து 5.06க்கும், பளையிலிருந்து 5.30க்கும் புறப்பட்டு 6.44க்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20க்கு காங்கேசனை அடையும்.

அனைவரும் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என  அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.