தெ.ஆப்பிரிக்க துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்

192 0

தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள சோவெட்டோ நகரில் மதுக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், காயமடைந்தவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை என்றும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி ரவைகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.தென்னாப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் பகுதியில் உள்ள ஒருமதுக்கடையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 21 இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உலகில் வன்முறை சம்பவங் கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. அங்கு ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வன்முறையால் கொல்லப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.