யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்கவும், வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் அரசாங்கம் இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சரத் பொன்சேகா இதனை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுடன் உள்ளனர்.
ஆனால் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க யாரும் இணங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.