அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி?

108 0

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:- திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:- பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை மதித்து நடப்போம். ஓ.எஸ். மணியன் கூறியதாவது:- உண்மையாக வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு இது தான். தலைவர்கள், பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நடைபெற்ற கூட்டம் இப்போது அ.தி.மு.க. கழகத்தின் ஒரு தொண்டர் பொதுச்செயலாளர் ஆகிறார் என்பது தான் இந்த கூட்டத்தின் வரலாற்று சிறப்பு. மைத்ரேயன் கூறியதாவது:- இன்று நடைபெறும் கழக பொதுக்குழு வரலாற்று சிறப்பு வாய்ந்த பொதுக்குழு. இன்றைய பொதுக்குழுவிலே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்.

வைகைச்செல்வன் கூறியதாவது:- இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஒற்றை தலைமை குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இன்னும் பல்வேறு அம்சங்கள் இன்றைய பொதுக்குழுவில் உள்ளது. ஜெயக்குமார் கூறியதாவது:- இது எழுச்சியான பொதுக்குழு. ஆரவாரமிக்க பொதுக்குழு. வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு’ என்றார்.