கொட்டகலை, தலவாக்கலையில் ஜனாதிபதியை பதவி விலகக்கோரி போராட்டங்கள் முன்னெடுப்பு

135 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை மற்றும் கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நகரங்களில் கடைகள் மூடப்பட்டு, மக்கள் போராட்டத்துக்கு வர்த்தகர்களும் தமது ஆதரவு வழங்கினர்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், முச்சரக்கரவண்டி ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர் .

அத்துடன், கோட்டா கோ கம கிளையொன்றும் தலவாக்கலை நகரில் உதயமானது. ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலகும்வரை போராட்டத்தை தொடரும் வகையிலேயே கோட்டா கோ கம கிளை உருவாக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலையையும், அதனை சூழவுள்ள பகுதிகளில் வாழும் பலர் போராட்டத்தில் பங்கேற்று, கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கினர்.

இதேவேளை, கொட்டகலை நகரிலும், நகர வர்த்தகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்தோடு, கொட்டகலை கொமர்ஷல் பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.