ஆட்சியை மக்களிடம் வழங்க வேண்டும்!

159 0

இந்த நாட்டில் கல்வி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டின்ஜனாதிபதியும்,அமைச்சரவையும் வெளியேறி ஆட்சியை மக்களிடம் வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும்,சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளருமான பொன்.உதயரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கில் உள்ள அனைத்து தரப்பினரும் கோட்டாபயவினை வீட்டுக்கு செல்லக்கோரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் கல்வி பாரிய பின்னடைவு

இன்று இந்த நாடு அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.இதற்கு முழுமையான காரணம் கோட்டாபயவும் அவர்களது அமைச்சர்களுமே.கடந்த மூன்று வருடமாக இலங்கையின் கல்வி பாரிய பின்னடைவினை கண்டு வருகின்றது. இதற்கான முழுப்பொறுப்பும் கோட்டாபயவும் அவரது அமைச்சர்களையுமே சாரும்.

இதன் காரணமாக மக்களின் கோரிக்கையினையேற்று அவர்கள் பதவி விலக வேண்டும்.பதவி விலகி ஆட்சியை மக்களிடம் வழங்கி மக்களாட்சியாக கொண்டு செல்ல வேண்டும்.

இலங்கையின் பாரிய கல்வி பின்னடைவுக்கு அரசாங்கமே காரணம்!பொன்.உதயரூபன் | Srilanka Economic Crisis Against Gotapaya

இன்றுள்ள ஆட்சியாளர்கள் அடாவடித்தனங்கள் மூலம் ஆட்சியில் நீடிக்கலாம் என்று நினைக்கின்றார்கள். அவ்வாறு ஒருபோதும் செயற்படுவதற்கு இந்த நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

இந்த ஆட்சியாளர்களினால் வடகிழக்கு மக்களும் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளார்கள்.இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையானது தமிழ் மக்களுக்கும் தாக்கங்களை செலுத்தியுள்ளது.

எனவே நாளை நடைபெறும் போராட்டத்திற்கு வடகிழக்கு மக்களும் தமது ஒன்றிணைந்த ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.