பட்டினப்பாக்கம்-குளச்சல் தமிழக கடல் பகுதியில் புதிதாக 2 வகை மீன்கள் கண்டுபிடிப்பு

88 0

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய மின் மரபணு வள பணியகம் ஆகியவை தமிழகத்தில் 2 புதிய வகை கடல் மீன்களை அடையாளம் கண்டுள்ளது. ஒன்று சென்னை பட்டினப்பாக்கம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து செல்லும் மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அதற்கு ‘டுசுமிரியா மொடகண்டை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

மற்றொரு மீன் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்லும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. இதற்கு ‘அரியோசோனா ஆல்பிமகுலாட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பட்டுள்ளது. கண்களின் பின்புறம் முதுகுப் புற விளிம்பில் கருப்பான புள்ளிகள் அல்லது புள்ளிகளுடன் சாம்பல் நிறத்தில் உள்ளது.

இது பளபளப்பான உடலை கொண்டுள்ளது. அரபிக்கடலில் 200 மீட்டர் ஆழத்தில் இந்த மீன் பிடிப்பட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். இந்த மீன் நச்சுத்தன்மை அற்றது. கடல் பாறை பிளவுகளில் எளிதில் பிடிக்க முடியாத இடங்களில் வாழ்கிறது. இந்த மீன் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை ஓரங்களில் பரவி இருக்கலாம் என்று தெரிகிறது. மூலக்கூறு பகுப்பாய்வுக்கு பிறகே இந்த மீன்கள் புதிய வகை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இசை சர்வதேச ஆராய்ச்சி இதழ் வெளியிட்டுள்ளது.