சுகாதார பணியாளர்களிற்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டது ஏன் – ரவிகுமுதேஸ் விசனம்

91 0

சுகாதார பணியாளர்கள் நாளை மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்பதால் அவர்களிற்கான எரிபொருள் விநியோகம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என சுகாதார தொழிற்சார்துறையினர் ;அமைப்பொன்று The Academy of Health Professionals ;தெரிவித்துள்ளது.

அமைப்பின் தலைவர்ரவிகுமுதேஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளால் ஆர்ப்பாட்ட இயக்கத்தின் பலத்தை குறைக்க முடியாது என தெரிவித்துள்ள சுகாதாரஅமைச்சின் செயலாளர் மீது குற்றம்சாட்டியுள்ளதுடன் அவர் அரசாங்கத்தை பாதுகாக்கும் விதத்தில் செயற்படுகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார தொழில்துறையினருக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கைகள் 48 மணித்தியாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் போன்ற பதவிகள் அரசியல்மயப்படுத்தப்படுவதால் மக்கள் அவ்வாறான பதவிகளில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள ரவிகுமுதேஸ் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாளைய தங்களது தொழிற்சங்கம் கலந்துகொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.