நாங்கள் சொல்வதை செய்யும் கட்சி- சஜித்

171 0

தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு துறையிலும் மக்களை ஏமாற்றியுள்ளதுடன், இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகளினால் நாடு தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், எதிர்க்கட்சியாக தாம் உட்பட தனது குழுவினர் ஒருபோதும் மக்களை ஏமாற்றியதில்லை என்பதோடு, ‘ஹுஸ்ம’ வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டும் கூட மக்களுக்காக பல பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (7) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் விவசாயிகளைக் கூட ஏமாற்றிவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,உரத் தட்டுப்பாட்டினால் பெரும் போக பருவ அறுவடை 50 வீதத்தால் குறைந்துள்ளதாகவும்,தற்போது சிறு போக பருவத்தின் விளைச்சலும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக உணவு திட்ட அமைப்பைக் கூட அரசாங்கம் ஏமாற்றி விட்டதாகவும், இதற்ப்பால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும், அவர்களின் பொறுப்புகளை ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தற்போது, ​நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 3 குடும்பங்களில் 1 குடும்ப அலகு உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதோடு 62 இலட்சம் பேர் ஊட்டச்சத்தான உணவைப் பெற முடியாது நிலை உள்ளதாகவும், தற்போது ஊட்டச்சத்து ஒரு தேசிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும்,கர்ப்பிணி தாய்மார்களும் அவர்களில் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதார, சமூக, அரசியல் இலக்குகளை அடைவதற்காக போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதில் மாற்றுச் சக்தி மற்றும் எதிர்கால இலக்கு பற்றிய புரிதல் இருக்க வேண்டும் எனவும்,தாம் உள்ளிட்ட குழுவினர் புதிய தாராளவாதிகளே அல்லது சோசலிஸ்டுகளோ அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.தான் நம்புவது போல, புதிய தாராளவாதமோ அல்லது சோசலிசமோ நடைமுறை சாத்தியமில்லை எனவும்,அதற்கு முதலாளித்துவம் முக்கியம் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், முதலாளித்துவத்தின் மூலம் உருவாக்கப்படும் வளங்கள் சமூகக் கொள்கையின் மூலம் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தானும் தனது குழுவினரும் மக்களின் பக்கம் மனிதாபிமானத்துடன் செயற்படுவதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், தான் உட்பட தனது அணியால் ஆளப்படும் அரசாங்கத்தில் நட்பு வட்டார முதலாளித்துவத்திற்கு இடமில்லை எனவும் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தை மிதிப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது எனவும், மனிதநேய முதலாளித்துவத்தின் பிரகாரம் சலருக்கும் பயன் நல்கும், பாராபட்சமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்காக எப்போதும் குரல் எழுப்ப வேண்டும் என ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரர் இதன் போது கருத்துத் தெரிவித்ததோடு, கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானால் இந்நாடு அழிந்துவிடும் என அவர் ஏலவே குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.