இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

214 0

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்சை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்பெனிவொங் நியமித்துள்ளார்.

தீவுநாடுகள் என்ற அடிப்படையிலும் இந்து சமுத்திர அயல்நாடுகள் என்ற அடிப்படையிலும் இலங்கை அவுஸ்திரேலியாவினது வலுவான நீடித்த உறவுகள் அமைதியான ஸ்திரதன்மை வளம்மிக்க இந்தோ பசுபிக்கிற்கான அபிலாசைகளின் அடிப்படையிலானவை என பெனிவொங் தெரிவித்துள்ளார்.

2022 ம் ஆண்டு இருநாடுகளிற்கும் இடையிலான இராஜநதந்திர உறவுகள் மலர்ந்து 75 ஆண்டுகளாவதை நாங்கள் குறிக்கும் அதேவேளை விரிவான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான நெருங்கிய தொடர்புகள் மூலம் எங்களின் நெருங்கிய நட்பு வலுவடைகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

17,000 பேரை கொண்டஅவுஸ்திரேலிய  இலங்கை சமூகம் அவுஸ்திரேலிய சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பானது அபிவிருத்தி ஒத்துழைப்பு கல்வி மற்றும் ஆள்கடத்தலை தடுப்பதற்கான நெருங்கிய ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ;அர்த்தபூர்வமான நல்லிணக்கத்தை ; ஏற்படுத்துவதில் முன்னேற்றத்தை காண்கின்ற  நிலையில் அவுஸ்திரேலியா அதற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதன் 70வருட வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கி;ன்ற நிலையில் அவுஸ்திரேலிய இலங்கைக்கு உதவுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது.எங்களின் 50மில்லியன் டொலர் பங்களிப்பு இலங்கை அவசர உணவு மற்றும் மருந்துதேவைகளை நிறைவேற்ற உதவும் எனவும் பெனி வொங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள போல் ஸ்டீபன்ஸ் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவரான இவர் .இந்தியா இந்து சமுத்திர பிரிவிற்கான உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார்.

நியுயோக்கில் உள்ள அவுஸ்திரேலியாவின் ஐநாவிற்கான நிரந்தர அலுவலகத்திலும் பல நாடுகளின் தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.