ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் – ரஞ்சித் மத்துமபண்டார

207 0

ஒட்டுமொத்த மக்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தும் போது ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் புறக்கணிக்கும் போது அரசியலமைப்பு விவகாரத்தில் மக்களின் அபிலாசையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை மக்கள் வாக்கெடுப்பிற்கு விடும் வகையில் சமர்ப்பித்துள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபையில் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தலைமையில் ;(06) புதன்கிழமை பாராளுமன்றம் கூடிய போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும் மற்றும்,எதிர்தரப்பினர் முன்வைத்த கூற்றினை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மே மாதம் 11ஆம் திகதி குறிப்பிட்டார்.

19ஆவது திருத்தத்தின் இலட்சினத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமூல வரைபு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முழு நாட்டு மக்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஒன்றினைந்து வலியுறுத்தும் போது ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 22அவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தில் ஜனநாயக இலட்சினங்கள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை.

அரசியலமைப்புபு திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைபு வேறு,வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வரைபு பிறிதொன்று, அரசியலமைப்பு திருத்தம் விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களும் ஏமாற்றப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதியின் தேவைக்கமையவே 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இது வெட்கப்பமடையும் செயற்பாடாகும்.

அத்துடன் அரசியலமைப்பு பேரவை சுயாதீனமற்றதாக உள்ளது பாராளுமன்றிற்கு புறம்பான நியமனம் ஆளும் தரப்பினருக்கு சார்பாக அமையும் வண்ணம் காணப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் சமர்ப்பித்த அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல நிறைவேற்றத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கும் போது.அரசியலமைப்பு விவகாரத்தில் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வது அவசியமாகும் என்பதற்காகவே மக்களாணைக்கு மதிப்பளிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.