புகையிரத நிலைய பாதுகாப்புக்கு இராணுவத்தை வழங்குமாறு கோரிக்கை

145 0

புகையிர நிலைய பாதுகாப்புக்கு இராணுவத்தை வழங்குமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட வாகனங்களில் பயணிப்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் அனைவருமே ரயில் சேவையை நம்பியே தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்

இவ்வாறான சூழ்நிலையில் புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பலரும் பாரிய சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

இது குறித்து ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன கூறுகையில்,
புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ; நேற்று க்காலை புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது. ; மேலும், திட்டமிடப்பட்ட ரயில்களில் பாதியளவு ரயில்கள் இயங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறுகையில்,
“குறைந்த எண்ணிக்கையிலான புகையிரதங்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் நிலையங்களுக்கு முன்னாள் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் பதிவாகின.

இதனால் அச்சமடைந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் கடமைகளை மேற்கொள்ள தயங்கி வருவதுடன், தமக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுள்ளனர்” என்றார்.

கொழும்பு கோட்டை, மருதானை, ராகம, கொள்ளுப்பிட்டி மற்றும் பாணந்துறை ஆகிய புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் தமது கடமைகளை விட்டுச் சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.