தலாய்லாமா பிறந்தநாள் விழா: கொடைக்கானலில் திபெத்தியர்கள் நடனமாடி கொண்டாட்டம்

143 0

கொடைக்கானலில் வசிக்கும் திபெத்திய மக்கள், தலாய்லாமா பிறந்தநாளை கேக் வெட்டியும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திபெத்திய மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் புனிதராக கருதப்படும் தலாய்லாமாவின் 87-வது பிறந்தநாள் விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவிற்கு கொடைக்கானல் திபெத்தியர்கள் நலச் சங்க தலைவர் கெல்சாங் சோடான் தலைமை வகித்தார். கொடைக்கானலில் வசித்துவரும் திபெத் மக்கள் விழாவில் பங்கேற்று கேக் வெட்டி தலாய்லாமா பிறந்தநாளை கொண்டாடினர்.

கொடைக்கானலில் தலாய்லாமா பிறந்த நாளை கொண்டாடிய திபெத்தியர்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திபெயத்தியர்கள் தொடர்ந்து குழு நடனமாடி மகிழ்ந்தனர்.