தமிழகத்தில் கஞ்சா விற்பதை தடுக்க தனிப்படை வேண்டும்- சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

145 0

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் துணைப்பொதுச் செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் என்.சுந்தர் விளக்கவுரை வழங்கினார். * அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமாரின் பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடுவது.

* சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் ஜூலை மாதம் இறுதிக்குள் சுமார் 500 நிர்வாகிகள், 10,000 புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை மேலும் வலுப்படுத்துவது.

* வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி இயக்கத்தின் துவக்க விழாவை தலைவர் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவை சிறப்பாக கொண்டாடுவது. * தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவங்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். *

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, குறிப்பாக இரவு நேர மின்வெட்டினை சரி செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். * மாணவர்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சென்னையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து அதை விற்பவர்கள் மீது காவல்துறையினர் தனிப்படை அமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து தொற்று நோய் பரவாமல் இருக்க தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநில பொருளாளர் சுந்தரேசன், வேலூர் மண்டல அமைப்புச் செயலாளர் ஞானதாஸ் , மாநில இளைஞரணி செயலாளர் கிச்சா ரமேஷ் , மாநில மாணவர் அணி செயலாளர் அக்வின் நோயல், தலைமை பேச்சாளர் வேந்தன் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.