பாரிமுனையில் ஆவணமின்றி கொண்டு வந்த மூன்றை கிலோ வெள்ளிக்கட்டி பறிமுதல்

185 0

சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சந்தேகத்தின் பெயரில் பையுடன் நேற்று இரவு நின்று இருந்த ஒருவரை ரோந்து சென்ற எஸ்பினேடு போலீசார் பிடித்து சோதனை செய்தபோது வெள்ளி கட்டி வைத்திருந்தார். இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் எஸ்பினேடு போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் அவரிடம் நடத்திய விசாரணையில் கும்பகோணம் சிங்காரத் தோப்பை சேர்ந்த செந்தில் செல்வம் வயது 45 என்பதும் இவர் சாமி சிலைக்கு கிரீடம் செய்வதற்காக வெள்ளிப் பொருள்களை கொண்டு வந்து என்.எஸ்.சி.போஸ் சாலையில் உருக்கி தங்க கட்டிகளாக கொண்டு செல்வதாக கூறினார். இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் 3.5 கிலோ வெள்ளி கட்டியை பறிமுதல் செய்து விற்பனை வரி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் பேரில் விற்பனை வரி துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் இருந்த வெள்ளிக்கட்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.