நேபாள பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

418 0

download (11)நேபாள நாடாளுமன்றத்தில் 601 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 80 உறுப்பினர்கள் இருப்பதால் அக்கட்சி எந்த கூட்டணியையும் பதவியில் அமர்த்த முடியும். தற்போது ஒன்றுபட்ட நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக கேபி ஒலி இருந்து வருகிறார்.

இந்நிலையில் கூட்டணியில் இடம் பெற்றிருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரசந்தா அரசுக்கு அளித்துவந்த ஆதரவை நேற்று முன்தினம் திரும்ப பெற்றார். இதனால் பிரதமர் கேபி ஒலி பதவியில் தொடருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சிப்பொறுப்பை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைப்பதாக கடந்த மே மாதம் கே.பி.ஒலி கூறியிருந்தார். ஆனால் இதனை நிறைவேற்றாமல் கே.பி.ஒலி தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் கையெழுத்திட்டப்பட 9 ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் பிரதமர் தாமதம் காட்டியதாலும் கூட்டணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் ரமேஷ் லேலாக், மாவோயிஸ்ட் தலைவர் ராம் நாராயண் பிதாரி ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.