பர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

189 0

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், பர்கினோ பாசோவின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வந்து இறங்கினர்.

அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் காட்டுமிராண்டித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அங்கிருந்த அனைவரும் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.