இலங்கையின் பொருளாதாரம் மரண படுக்கையில்:உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்

156 0

இலங்கையின் பொருளாதாரம் மரண படுக்கையில் இருப்பதாக உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்டீவ் ஹேன்க் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடன் வழங்க மறுத்துள்ள சர்வதேச நாணய நிதியம்

 

 

இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 122 வீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமான பக்கம் திரும்பியுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளது.

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் 16 நிகழ்ச்சித்திட்டங்களில் சம்பந்தப்பட்ட போதிலும் அதில் ஒன்றில் கூட இலங்கை வெற்றி பெறவில்லை எனவும் ஸ்டீவ் ஹேன்க் கூறியுள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்க வேகம்

இதனிடையே கடந்த ஜூன் மாதத்தின் 30 நாட்களில் அதிகளவான பணவீக்க வீதம் சிம்பாப்வே நாட்டில் பதிவாகியதுடன் குறைந்த மட்டத்திலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிகூடிய பணவீக்க வேகம் கொண்ட நாடாக இலங்கை முன்நோக்கி வந்துள்ளதுடன் இலங்கையின் பணவீக்கம் 117 வீதமாக பதிவாகியுள்ளது எனவும் ஸ்டீவ் ஹேன்க் கூறியுள்ளார்.