குண்டுத் தாக்குதல் ? பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன ?

246 0

நாளை (6) ; அல்லது நாளை மறு தினம் (7) வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதலொன்றோ அல்லது நாசகார செயல்களோ, வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றின் தலையீட்டுடன் இடம்பெறலாம் என பொலிஸ் மா அதிபர் சந்தன ; விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு அறிவித்துள்ளார்.

IGP/PA/CID/OUT/1687/22 எனும் கடந்த ஜூன் 27 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஊடாக பொலிஸ் மா அதிபர் இதனை பாதுகாப்பு செயலருக்கு அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 27 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் COM/PA/DIG/CID/OUT/20/2022 எனும் கடிதம் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ள ; தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரால் இது குறித்து பாதுகாப்பு செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்துக்கு அமைய,

‘ 2022 ஜுலை 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நினைவுகூரப்படவுள்ள கரும்புலிகள் தினத்தில் வடக்கு, கிழக்கு அல்லது தென்மாகாணத்தை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல் அல்லது ஏதோவொரு நாசகார செயலொன்று வெளிநாட்டு உளவுச்சேவை ஒன்றின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ள நாசகார செயலுக்கான பொறுப்பை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது சுமத்தவும் ஆயத்தங்கள் உள்ளதாக அறியமுடிகின்றது.

தற்போதும் யாழ் பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் சேவையாற்றுபவர்கள் மற்றும் பிரபுக்களுக்கு எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்கவேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத்தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவின் உளவுப்பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் (64975) தாஸ் குப்தாவுக்கு அவரது தனிப்பட்ட ஒற்றர் தகவல் அளித்துள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்களில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை இலக்குவைத்து அவர்களுக்கும் அவர்களது வீடுகள்மீதும் தாக்குதலை முன்னெடுத்து அவர்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இடதுசாரிக்கட்சிகள், எதிர்க்கட்சியின் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ என பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலருக்கு அறிவித்துள்ளார்.