லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணிற்கு கிடைத்த வாய்ப்பு

138 0

லண்டனில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தெற்காசிய உடைகளை விற்பதற்காக உலக புகழ்பெற்ற ASOS ஷாப்பிங் தளத்துடன் ஒப்பந்தம் செய்து விற்பனை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணான சஹானி குணசேகரா (26) என்பவரே இவ் வாய்ப்பை பெற்றுள்ளார்.

கன்யா லண்டன் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ள இவர் தெற்காசிய உடைகளை சாதாரணமாக விற்க தொடங்கி தற்போது ASOS ஷாப்பிங் தளத்துடன் ஒப்பந்தம் செய்து விற்பனை செய்யும் நிலையை அடைந்துள்ளார்.

கன்யா லண்டன், ASOS இல் இடம்பெறும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

நான் ஒரு இலங்கை குடும்பத்தில் பிறந்தேன், எனது பெற்றோர் இருவரும் இலங்கையர்கள். என் அம்மா எப்போதும் தனது சொந்த ஆடைகளை தானே உருவாக்குவார்.நிறைய தெற்காசிய தாய்மார்கள் தையல் துணி தைப்பதை ரசித்து பார்த்துள்ளேன்.

அது தான் என் மனதுக்குள் இந்த ஆடைகள் மற்றும் பேஷன் துறையை தேர்ந்தெடுக்க தூண்டியது. என் பெற்றோர் பிரித்தானியா வருவதற்கு நிறைய தியாகங்களை செய்தனர்.

அதனால் ஃபேஷனில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தேன். ஒரு புலம்பெயர்ந்தவராக எப்போதும் இங்கு முதலில் வாழ்வாதாரம் தான் எனக்கு முக்கியம்.

அதன்படி பட்டப்படிப்பை முடித்தவுடன் எதாவது சொந்தமாக செய்து அதன்மூலம் குடும்பத்துக்கு பெருமை தேடி தர வேண்டும் என எண்ணினேன்.

2019 இல் கன்யா லண்டனை தொடங்கினேன். ஒருநாள் ASOS நிறுவனம் என்னை அணுகியது, அவர்கள் எனது தயாரிப்புகள் மற்றும் அதன் தரத்தை விரும்புவதாக தெரிவித்தனர்” என்றார்.