ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை – சாகர காரியவசம்

191 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமா தற்போது ஆட்சியில் உள்ளது என்பது சந்தேகத்திற்குரியது.

ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

ராஜபக்ஷர்களினால் பிரபல்யமடைந்தவர்களே அரசாங்கத்தை பலவீனப்படுத்தி முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கினார்கள் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் ;(01) வெள்ளிக்கிழமை ;இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இந்த நம்பிக்கையின் காரணமாகவே கூட்டணியில் எம்முடன் ஒன்றினைந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கினார்கள்.

அதே போல் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் ஆதரவு வழங்கினார்கள். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பிரபல்யமடைந்தவர்கள் தற்போது துரதிஸ்டவசமாக அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டு நாட்டை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்கள்.தற்போது நாட்டில் அரசாங்கம் என்பதொன்று உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினரும், அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுபவர்களும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுன தலைமையிலானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கே ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள்.ஆகவே கையளிக்க முடியாத பொறுப்புக்கள் எமக்குண்டு.

நாட்டு மக்கள் ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ஆகவே மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது எனது பொறுப்பாகும்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய மக்களை பொதுஜன பெரமுன ஒருபோதும் கைவிடாது.

நாடு என்ற ரீதியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளோம்.இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல,

நாட்டு மக்கள் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.குறுகிய நோக்கங்களை துறந்து சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் நாளாந்தம் வீழ்ச்சியடைந்து செல்கிறது.சிறந்த சூழல் காணப்பட்டால் மாத்திரமே சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என்றார்.