உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடையில் வெளியாட்கள்

420 0

high_court1_2597546fசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வெளி யாட்களின் நடமாட்டம் அதிகரித் துள்ளதால் அதன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வழக் கறிஞர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேம்பரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இது நடந்துள்ளதாக கூறப்பட்ட போதிலும் உயர் நீதிமன்ற வளா கத்தின் கீழமை நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில் பாது காப்பு குறைபாடு இருப்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் பட்டப் பகலில் ஒருவர் எப்படி நீளமான கத்தியுடன் நுழைந்தார்? காவல் துறையின் சோதனையில் இருந்து அவர் எப்படி தப்பினார் என்ப து போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற வளா கத்தில் உயர் நீதிமன்றம் தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை யினரின் பாதுகாப்பில் உள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு வருபவர் கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். வழக்கு தொடர்பான விவரங்களைத் தெரிவித்து, அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டுதான் பொதுமக்கள் உயர் நீதிமன்ற பகுதிக்குள் நுழைய முடியும்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு மாநில காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது. சட்டம், ஒழுங்கு போலீஸார் 72 பேர், ஆயுதப்படை காவலர்கள் 133 பேர் என மொத்தம் 205 பேர் மூன்று ஷிப் டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயணைப்பு நிலையம் அருகே அமைந்துள்ள நுழைவுவாயில் வழியாக மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர் களிடம் உரிய விவரங்கள் பெறப் பட்டு அனுமதிச் சீட்டு தரப்படுகிறது. இங்குள்ள லக்கேஜ் ஸ்கேனர் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. ஆவின் நுழைவு வாயில் அருகே உள்ள லக்கேஜ் ஸ்கேனர் பழுதாகி யுள்ளது. வழக்கறிஞர் உடையில் வருவோரை சோதனை செய் தாலோ, அடையாள அட்டை கேட் டாலோ தகராறு செய்கின்றனர். அதனால் அவர்களை நாங்கள் சோதனை செய்வதில்லை. பாது காப்பு குறைபாட்டுக்கு இதுதான் முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கள் கூட்டமைப்பின் தலைவர் சாந்தகுமாரி கூறும்போது, “உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறி ஞர் உடையில் வெளியாட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரண மாகவே வழக்கறிஞர் வெட்டப் பட்டிருக்கிறார். பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். பாதுகாப்பு கருதி உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது” என்றார்.

வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் கூறும்போது, “உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட் டப்பட்டது பாதுகாப்பு குறைபாட் டையே காட்டுகிறது. இதுபோன்ற வன்முறை மீண்டும் நடக்காமல் இருக்க உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாது காப்புப் படையினரின் பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்றார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீ.கண்ணதாசன் கூறும்போது, “பாதுகாப்பு குறைபாட்டுக்கு சில வழக்கறிஞர்களும் காரணம். எவ்வித அடையாள அட்டையும் இல்லாமல் எல்லோரும் வந்து போகலாம் என்றால் சந்தைக் கும் நீதிமன்றத்துக்கும் வித்தி யாசம் இல்லாமல் போய்விடும். அடையாள அட்டையை காண்பித் து, சோதனை செய்யும் காவல் துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும். புகைப்படம் எடுத்த பிறகே உயர் நீதிமன்ற வளாகத் துக்குள் அனுமதிக்கும் நடைமுறை வர வேண்டும்.” என்றார்.