2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படைகள், ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே வதை முகாம் அமைக்க 2 லட்சத்துக்கு மேலான கைதிகளை அடைத்தனர். இதில் ஆயிரக்கணக்கானோரை தண்டனைகள் மூலம் கொன்றனர்.
நாஜி படை காலத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது தற்போதைய ஜெர்மனி அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதில் நாஜி வதை முகாமில் காவலராக பணியாற்றிய 101 வயது முதியவர் ஜோசப் ஷிட்சுக்கு எதிராக கடந்த ஆண்டு விசாரணை தொடங்கப்பட்டது.
அவர் 1942-1945-ம் ஆண்டுகள் இடையேயான காலகட்டத்தில் பெர்லினில் உள்ள வதை முகாமில் 3,518 கைதிகளை கொலை செய்ய உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவங்கள் நடந்த போது ஜோசப் ஷிட்சுக்கு 21 வயது. இவ்வழக்கில் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஜெர்மனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.